கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57-ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் கடந்த 18-ம் தேதி கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டதை அருந்தியவர்களுக்கு உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் நேற்று வரை மொத்தம் 200 மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டனர். இதில், நேற்று இரவு வரை 4 பெண்கள், ஒரு திருநங்கை உட்பட 54 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் இன்றும் உயிரிழந்தனர். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.