விஜயின் லியோ திரைப்படம், வரும் அக்டோபர் 19-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த திரைப்படத்தை காண்பதற்கு, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இந்நிலையில், UK-வில் இப்படம், ப்ரீ புக்கிங்கில் சாதனை படைத்துள்ளது. அதாவது, ரிலீஸ் ஆவதற்கு 23 நாட்கள் இருக்கும் நிலையில், இப்படம், 2 கோடியே 26 லட்சத்து 64 ஆயிரம் ரூபாயை வசூலித்துள்ளது.
இதன்மூலம், ஜெயிலர் படத்தின் ப்ரீ புக்கிங் சாதனையை முறியடித்துள்ளது. ஜெயிலர் திரைப்படம், 2 கோடியே 26 லட்சத்து 37 ஆயிரம் ரூபாயை, ப்ரீ புக்கிங்கில் வசூலித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.