லியோ படம் எப்படி இருக்கு….முழு விமர்சனம் இதோ..!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இப்படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சொந்தமாக கடை நடத்தி வரும் பார்த்திபன் (விஜய்) , தனது மனைவி திரிஷா மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் ஒரு நாள், தன் குழந்தைக்கு சிலரால் ஆபத்து நேரிட, எதிரில் நிற்கும் அத்தனை பேரையும் நெற்றி பொட்டில் சுட்டு வீழ்த்துகிறார் பார்த்திபன்.

கொல்லப்பட்டவர்களின் கூட்டாளிகள் பார்த்திபனையும், அவரின் குடும்பத்தையும் கொல்ல முயற்சி செய்கிறார்கள். அவர்களுடன் பெரும் போராட்டம் நடத்தி கொண்டு இருக்கிறார் பார்த்தி. இதனிடையே பார்த்தியின் வாழ்க்கைக்குள் ஆண்டனி தாஸ் நுழைகிறார். அங்கு இருப்பது பார்த்தி அல்ல லியோ என கூறுகிறார்.

அப்படியென்றால் உண்மையில் அங்கு இருப்பது பார்த்தியா, லியோவா என்ற கேள்விக்கான பதில்தான் படத்தின் மீதிக்கதை.

பார்த்திபன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் முற்றிலும் வேறு விதமான நடிப்பை கொடுத்துள்ளார். ண்டனியாக வரும் சஞ்சய் தத் மிரட்டலான நடிப்பை கொடுத்துள்ளார். அர்ஜுன், கவுதம் மேனன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்கள் கதைக்கு நியாயம் செய்திருக்கின்றன.

முதல் பாதியில் கதையை பிட்ச் செய்ய நேர்த்தியான திரைக்கதையை கையாண்ட லோகேஷ், இரண்டாம் பாதியில் அதை கோட்டை விட்டு இருக்கிறார். இருப்பினும் விஜயின் நடிப்பும், ஆக்ஷனும் அதனை மறைத்து விடுகிறது.

பின்னணி இசையில் அனிருத் முழு பலம் கொடுத்து தாங்கி இருக்கிறார். கதையின் ஆழத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால், லியோவை கொண்டாடி இருக்கலாம்.

RELATED ARTICLES

Recent News