லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் நாளை வெளியாகிறது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீண்ட எதிர்ப்பார்ப்புக்கு இடையே லியோ படத்தின் டிக்கெட் புக்கிங் தமிழ்நாட்டில் சில நாட்கள் முன்னர் தொடங்கியது. இதையடுத்து சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் லியோ படம் திரையிடப்படாது என அறிவிப்பை வெளியிட்டது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் லியோ திரைப்படத்தை வெளியிடுவது தொடர்பாக, தயாரிப்பு நிறுவனத்திடம் நடைபெற்று வந்த பேச்சு வார்த்தை நல்லபடியாக முடிந்த நிலையில் சென்னையின் முக்கிய திரையரங்குகளான ரோகிணி, வெற்றி, தேவி திரையரங்குகளில் நாளை ‘லியோ’ திரைப்படம் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.