ஆட்டத்தை ஆரம்பித்த கொரோனா.. எலுமிச்சை பழத்தை கையில் எடுத்த மக்கள்! ஏன் தெரியுமா?

சீனாவின் வூகான் நகரில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி, பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது, இதன் தாக்கம் குறைந்து, மக்கள் பழைய நிலைக்கு மாறிய நிலையில், சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது.

இந்த முறை கொரோனா வைரசை தடுப்பதற்கு, மருந்துகள், மாத்திரிகைகள் மட்டுமின்றி, இயற்கை வழிகளையும், பொதுமக்கள் பின்பற்றத் தொடங்கியுள்ளனர். இதன் விளைவாக, சீனாவில் உள்ள பொதுமக்கள், எலுமிச்சை பழங்களை அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

அதாவது, எலுமிச்சை பழத்திற்கு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் இருப்பதாக, சீனாவில் நம்பிக்கை உள்ளது. இதன் விளைவாக தான், எலுமிச்சை பழங்களை பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதன்காரணமாக, சீனாவில், எலுமிச்சையின் விலை, இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

ஆனால், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவர்கள், கொரோனா வைரசால் பாதிக்கப்படும் மக்கள், எலுமிச்சை பழங்களை மட்டும் நம்பாமல், தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்வது முக்கியம் என்று தெரிவித்துள்ளனர். மேலும், எலுமிச்சை பழத்தின் மூலம், கொரோனா வைரசை தடுக்க முடியும் என்பதில், மருத்துவ ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

RELATED ARTICLES

Recent News