நடிகையும், இசைக்கலைஞருமான சுப்புலட்சுமி காலமானார்..!!

பழம்பெரும் நடிகையும், இசைக்கலைஞருமான ஆர்.சுப்பலட்சுமி, உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 87.

தமிழில் விஜயின் பீஸ்ட் திரைப்படம், விண்ணை தாண்டி வருவாயா, ராமன் தேடிய சீதை, அம்மனி உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். மலையாளத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிப்படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த ஆர்.சுப்பலட்சுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பழம்பெரும் நடிகையான ஆர்.சுப்பலட்சுமியின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News