வத்தலக்குண்டு அருகே, நெற்றிக் கண்ணுடன் ஆட்டுக்குட்டி பிறந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள கட்டக்காமன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரவிவர்மா.
இவர், 15 ஆண்டுகளாக வெள்ளாடுகள் வளர்த்து வந்த நிலையில், இவருடைய ஆடுகளில் ஒன்று, குட்டியை ஈன்றுள்ளது. அந்த ஆட்டுக் குட்டி, நெற்றியில் கண்ணுடனும், கருமையான நாக்குடனும் பிறந்துள்ளது.
இவ்வாறு அதிசய உடல் உறுப்புகளுடன் ஆட்டுக் குட்டி பிறந்துள்ள இந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.