ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் – விக்ராந்த் நடிப்பில் கடந்த 9ம் தேதி வெளியான திரைப்படம் லால் சலாம். இந்த படத்தில் முக்கியமான ரோலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தார்.
பிரமாண்டமாக வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. முக்கியமான ரோலில் ரஜினிகாந்த் நடித்திருப்பதால் நல்ல வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்படம் வசூலில் தடுமாறி வருகிறது.
லால் சலாம் படம் நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.27 லட்சம் வசூல் செய்துள்ளது. படம் வெளியாகி 8 நாட்கள் ஆன நிலையில் இதுவரை ரூ.15 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது.