தமிழ் சினிமாவின் நடிப்பு அரக்கன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் எஸ்.ஜே.சூர்யா. பல்வேறு ஹிட் படங்களில் நடித்து வரும் இவர், சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், எஸ்.ஜே.சூர்யாவுக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நடிகர் ஷாருக்கான் நடிப்பில் கிங் என்ற திரைப்படம் உருவாக உள்ளது.
இந்த படத்தில், ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், அதனை அவர் ஏற்பாரா? அல்லது மறுப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..