டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில், அரவிந்த் கேஜ்ரிவால் விசாரணைக்கு இன்று காலை 11 மணிக்கு ஆஜராகும்படி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், அமலாக்கத்துறைக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில், “அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் தெளிவில்லாமல் இருக்கிறது. 5 மாநில தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு இன்று ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். விசாரணைக்கு ஆஜராக வேறு தேதி ஒதுக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.