தெகிடி, ஓ மை கடவுளே, போர் தொழில் என்று ஒருசில வெற்றிப் படங்களை கொடுத்தவர் நடிகர் அசோக் செல்வன்.
இவரும், நடிகை கீர்த்தி பாண்டியனும், ப்ளு ஸ்டார் என்ற படத்தின் படப்பிடிப்பின்போது, காதலிக்கத் தொடங்கினர்.
இந்த காதலை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்ல நினைத்த இவர்கள், பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு எடுத்தனர்.
அதன்படி, இருவீட்டு பெற்றோர்களும் பேசி, திருமண ஏற்பாடுகள் நடத்தப்பட்டது. அனைத்தும் சுமூகமாக நடந்த நிலையில், இன்று அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியனுக்கு கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது.
இதுதொடர்பான புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அந்த தம்பதிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.