சூர்யா படத்தின் 2-ஆம் பாகத்தில் ஹீரோவாக நடிக்கும் கவின்!

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நாயகனாக இருப்பவர் கவின். இவர் தற்போது கிஸ், மாஸ்க், ப்ளெடி பெக்கர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்த படங்களை முடித்த பிறகு, சூப்பர் ஹிட் படத்தின் 2-ஆம் பாகத்தில், கவின் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. அதாவது, சூர்யா, ஜோதிகா, பூமிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த திரைப்படம் ஜில்லுனு ஒரு காதல்.

இப்படத்தின் 2-ஆம் பாகத்தை இயக்குநர் கிருஷ்ணா இயக்க உள்ளாராம். இதில் ஹீரோவாக நடிகர் கவின் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதேபோல், நடிகர் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் 2-ஆம் பாகத்திலும், கவின் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News