கங்கனா ரனாவத்தின் ‘எமர்ஜென்சி’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் ‘எமர்ஜென்சி’. இதில், இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

கடந்த ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், சில குறிப்பிட்ட காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் கடந்த 6-ந் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது. ஆனால் ஒரு சில காரணத்தால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

இந்தநிலையில், தற்போது இந்த படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. மேலும் இந்த படத்திற்கான ரிலீஸ் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News