பிரபாஸ், கமல், அமிதாப் பச்சன் ஆகியோர் நடிப்பில், நாக் அஸ்வீன் இயக்கத்தில் உருவான திரைப்படம் கல்கி.
கடந்த ஜூன் 27-ஆம் தேதி ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்பனா தத், பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அந்த பேட்டியில், இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அதிர்ச்சி அளிக்கும் தகவலை கூறியுள்ளார்.
அதாவது, “கல்கி 2-ஆம் பாகத்தின் படப்பிடிப்பு, 2025-ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடக்கும். ஆனால், இப்படம், 2028-ஆம் ஆண்டு தான் ரிலீஸ் செய்யப்படும்” என்று கூறியுள்ளார். இவரது இந்த பேட்டி,நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.