தெலுங்கு நடிகர் பிரபாஸ், தற்போது கல்கி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படம், இந்து புராணத்தையும், அறிவியலையும் மையக்கருவாக வைத்து, மிகவும் பிரம்மாண்டமான முறையில் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் பிரபாஸின் கதாபாத்திரம் தொடர்பான போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த போஸ்டரில், பைரவா என்ற கதாபாத்திரத்தில் தான், பிரபாஸ் நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதே பெயரில் தான், நடிகர் விஜயும் ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனை அறிந்த விஜயின் ரசிகர்கள், உற்சாகம் அடைந்துள்ளனர்.