ஜார்க்கண்ட் மாநிலத்தின் சாஹிப்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த ரூபிக்கா (22) என்பவருக்கும் அங்கு வசிக்கும் தில்தார் அன்சாரி என்ற நபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அன்சாரிக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் ரூபிக்காவை இரண்டாவது திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ரூபிகா கடந்த சில நாள்களாக மாயமான நிலையில், ரூபிகாவின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து பெண்ணின் வீட்டருகில் மனித எலும்புகள் இருந்ததாக காவல்துறையிடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் எலும்புகளை மீட்டெடுத்தனர்.
அதன் பிறகு அன்சாரியின் வீட்டிற்கு சென்று சோதனை செய்ததில் அங்கு பல துண்டுகளாக வெட்டி சிதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ரூபிகாவை அன்சாரி கொலை செய்ததும் அவர் மனைவியை கொன்று 18 துண்டுகளாக வெட்டு சிதைத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ரூபிகாவின் தொலைந்து போன உடல் பாகங்களை மோப்ப நாயின் உதவியுடன் காவல்துறை தேடி வருகிறது.