ஜே.இ.இ நுழைவு தேர்வு: தோல்வி பயத்தால் மாணவன் தற்கொலை!

சென்னை தாம்பரம் அடுத்த திருவஞ்சேரியை சேர்ந்த போனிவார்ட் என்பவரின் மகன் ஈவன் ஜோஷுவா மப்பேட்டில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுதேர்வு எழுதி முடித்து பின்னர் ஜே.இ.இ நுழைவு தேர்வு எழுதியுள்ளார்.

தேர்வு எழுதிய நாள் முதலே ஜே.இ.இ நுழைவு தேர்வில் குறைந்த மதிப்பெண்தான் வரும் என்று எண்ணிய ஈவன் ஜோஷுவா மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறபடும் நிலையில், பெற்றோர்கள் வேலைக்கு சென்றதும் ஈவன் ஜோஷுவா வீட்டின் படுக்கையறையில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர் மாலை வீட்டுக்கு திரும்பிய பெற்றோர்கள் இதனை கண்டு அதிர்ச்சியடைந்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் அங்கு வந்த போலீசார் பிரேதத்தை கைபற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பின்னர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News