புதிய தலைமுறை செய்தியாளராக பணியாற்றி வந்தவர் முத்துகிருஷ்னன். இவர் கடந்த சனிக்கிழமை அன்று பணி முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
அப்போது சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியில்,மழைநீர் வடிகால் அமைப்பதற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார். இந்த நிலையில் முத்துகிருஷ்னனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் முக.ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு 5-லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டார்.
இதற்கு முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் 5-ந்து லட்சம் போதாது என்றும், மேலும் வாழ்நாள் முழுவதும் எவ்வளவு சம்பளம் வாங்குவாரோ,அவ்வளவு பணத்தை வழங்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.
இல்லையென்றல் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என வலியுறுத்திய அவர், இச்சம்பவத்திற்கு யார் காரணம் கண்டறிந்து, விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.