உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான கிரிக்கெட் போட்டிகளில் ஒன்று டி20 உலகக்கோப்பை. விறுவிறுப்புக்கு சிறிதும் பஞ்சம் இல்லாமல் இருக்கும் இந்த தொடரில், இந்தியா நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கிடக்கின்றனர்.
இந்நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா, காயம் காரணமாக, உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடருக்காக, பும்ரா பயிற்சி எடுத்தபோது, முதுகு தண்டுவடத்தில், காயம் ஏற்பட்டது.
இதன்காரணமாக, அந்த தொடரில் இருந்து அவர் விலகினார். டி20 உலகக்கோப்பையிலாவது அவர் விளையாடுவாரா? என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அந்த போட்டியிலும், அவர் விளையாடமாட்டார் என்பது தெரிந்ததும் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.