ஜெயிலர் படத்தின் ரிலீஸ்-க்கு சில நாட்கள் இருக்கும்போது, நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டார்.
இந்த பயணத்தின்போது, உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து, ஆசிர்வாதம் பெற்றார்.
இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலரும், ரஜினியை விமர்சித்து வந்தனர். இந்த விமர்சனத்தின் காரணமாக, தற்போது ஜெயிலர் படத்தின் வசூலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதாவது, 2 வாரங்களுக்கு பிறகு, ஜெயிலர் படத்தின் வசூல் 700 கோடி ரூபாயை தொடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போது வரை வெறும் 530 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. யோகி ஆதித்யநாத்தின் காலில் ரஜினி விழுந்ததே, இந்த சரிவுக்கு காரணம் என்று சொல்லப்பட்டு வருகிறது.