செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ். இவரது மனைவி பத்மபிரியா, ஐடி நிறுவனம் ஒன்றில், வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், பத்மபிரியா, தனது ஹவுஸ் ஓனர் வீட்டில் இருந்து, 7 சவரன் நகையை திருடிவிட்டு, தலைமைறைவாகியுள்ளார். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த வீட்டின் ஹவுஸ் ஓனர், காவல்துறையில் புகார் அளித்தார்.
அதன்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், 6 மாதங்கள் ஆகியும், குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்யவில்லை.
இதற்கிடையே, மறைமலைநகர் பகுதியில், பத்மபிரியா வசித்து வருவது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து, அங்கு சென்ற காவல்துறையினர், அவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஐடி நிறுவனத்தில் வேலை செய்வதால், அதற்கு ஏற்றவகையில், மேக்கப் போட வேண்டிய தேவை இருந்தது. அதனால், மேக்கப் போடுவதற்காக, நகையை திருடினேன் என்று கூறினார்.