ஆவடி அருகே திருமுல்லைவாயில் எஸ்.எம்.நகர் காவலர் குடியிருப்பில் இருப்பவர் விக்னேஷ் (27) இவர் மணலி உதவி ஆணையர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் பெண் காவலர் ஒருவரை காதலித்து வந்த நிலையில் அவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக மனமுடைந்து விக்னேஷ் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை குறித்து தகவல் அறிந்த திருமுல்லைவாயல் போலீசார் விக்னேஷ்யின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.