பாலஸ்தீனத்தின் காசா, லெபனான் மீதான தாக்குதல்கள், ஹிஸ்புல்லா தலைவர்கள் படுகொலை உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று (அக்.1) நள்ளிரவில் இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்.
மேலும், இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல் தோல்வி அடைந்ததாக தெரிவித்த அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, விரைவில் பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதனிடையே, இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று அமெரிக்க அதிவித்துள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரானில் அண்மைய நாட்களாக அதிகரித்து வரும் பாதுகாப்பு சூழலை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அதை கருத்தில் கொண்டு அங்கு இந்திய குடிமக்கள் பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மேலும், ஈரானில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அதோடு தெஹ்ரானில் அமைந்துள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறு அங்கு வசிக்கும் இந்திய மக்களை கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது.