‘இந்தியா கூட்டணியினர் என் பேச்சை கேட்கவில்லை’ – பீஹார் முதல்வர் நிதீஷ் குமார்

“இந்தியா கூட்டணியினர் என் பேச்சை கேட்கவில்லை. அதனால் தான் அவர்களை விட்டுவிட்டு பழைய இடத்துக்கு திரும்பி வந்துட்டேன்” என பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது: “கூட்டணிக்கு வேறு பெயரை தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தேன். ஆனால், அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் கடுமையாக முயற்சி செய்தும், ஒரு காரியத்தை கூட செய்யவில்லை. இண்டியா கூட்டணியினர் என் பேச்சை கேட்கவில்லை.

இன்று வரை எந்த கட்சிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து முடிவு செய்யவில்லை. அதனால் தான் அவர்களை விட்டுவிட்டு பழைய இடத்துக்கு திரும்பி வந்துட்டேன். பீஹார் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்” என்று அவர் கூறினார்.

RELATED ARTICLES

Recent News