இந்தியன் 2 படம் வெற்றி பெற வேண்டி தியேட்டர் முன்பு 5 கிலோ கற்பூரத்தை ஏற்றி போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்திய ரசிகரை போலீசார் கைது செய்தனர்.
கமலஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படம் இன்று நாடு முழுவதும் வெளியானது இதேபோன்று புதுச்சேரியில் 10-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தியன் 2-படம் வெளியானது.
இந்தத் திரைப்படம் வெற்றி பெற வேண்டி புதுச்சேரி கமல் தலைமை ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது மேலும் கமலின் கட்டவுட்டிற்கு ஆள் உயரம் மாலை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டினார்கள்.
இதனை தொடர்ந்து திரைப்படம் வெற்றி பெற வேண்டுமென கமல் ரசிகர்கள் 5 கிலோ கற்பூரத்தை அண்ணா சாலையில் உள்ள ரத்னா திரையரங்கு நுழைவு வாயிலில் ஏற்றி வழிபட்டனர். 5 கிலோ கற்பூரம் கொழுந்து விட்டு எறிந்ததால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. மேலும் இதனால் அண்ணா சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொழுந்துவிட்டு எறிந்து கொண்டிருந்த கற்பூரத்தை தண்ணீர் ஊற்றி அணைத்தனர் இதனை அடுத்து அனுமதியின்றி ஐந்து கிலோ கற்பூரத்தை நடு சாலையில் வைத்து ஏற்றி வழிபட்ட கமல் ரசிகரை அங்கிருந்து அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.