17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரில், இந்திய அணி, அமெரிக்க அணியிடம் படுதோல்வியடைந்தது.
இந்த தொடரில், குரூப் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, தமது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொண்டது. புவனேஷ்வரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், பலவாய்ந்த அமெரிக்க அணியை எதிர்கொள்ள முடியாமல் இந்திய வீராங்கனைகள் திணறினர்.
இதனால் அமெரிக்க அணி, கோல் மழை பொழிந்தது. இறுதியில் அந்த அணி 8-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. இந்திய அணி அடுத்த ஆட்டத்தில், மொராக்கோ அணியை வருகிற 14-ம் தேதி எதிர்கொள்கிறது.