சென்னை மற்றும் புறநகரில் உள்ள 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை ஆழ்வார்பேட்டை, அண்ணா நகர், எழும்பூர், நீலாங்கரை, அடையாறு உள்ள இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
கடந்தாண்டு ஏப்ரல் மாதம் இதே அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.
சென்னை நீலாங்கரையில் உள்ள ஜி ஸ்கொயர் தொடர்புடைய 9 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், சென்னை நந்தனத்தில் உள்ள வேல் பல்கலைக்கழகம், தரமணியில் உள்ள Pinnacle என்ற ஐடி நிறுவனத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டது.