கனமழை பாதிப்பு குறித்து கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் விசாரித்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு,
தங்களது ஆதரவை மிகுந்த மதிப்புடையதாகக் கருதுகிறேன் தோழர் பினராயி விஜயன் அவர்களே. தொடர்புகொண்டு விசாரித்தமைக்கு நன்றி.
சென்னை சீரான வேகத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. கேரள மக்களின் சார்பாக நீங்கள் வெளிப்படுத்திய உண்மையான அக்கறை எங்களது நெஞ்சங்களுக்கு இதமாக அமைந்துள்ளது. ஒன்றிணைந்து இந்தச் சவாலில் இருந்து மீள்வோம்!