ஷங்கர் யுனிவர்ஸ்.. மிஸ் பண்ணிட்டோமே? ஃபீல் பண்ணும் ரசிகர்கள்..

இந்தியன் 2 படத்தின் புரமோஷன் பணிகளில், இயக்குநர் ஷங்கர் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார்.

அப்போது, “சேனாபதி, அந்நியன், சிவாஜி, புகழேந்தி ஆகிய கதாபாத்திரங்களை, ஒரே யுனிவர்ஸில், இணைப்பது குறித்து யோசித்திருக்கிறீர்களா?” என்று கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த ஷங்கர், “நான் எந்திரன் திரைப்படம் இயக்கிக் கொண்டிருந்தபோது, சேனாபதி, அந்நியன், சிவாஜி ஆகிய 3 கதாபாத்திரங்களை, ஒரே யுனிவர்ஸில் இடம்பெறும் வகையில், ஒரு ஐடியாவை எழுதியிருந்தேன்.

அதனை எனது உதவி இயக்குநர்களிடம் கூறியபோது, அவர்கள் என்னை, மேலையும் கீழயும் பார்த்தார்கள். பிறகு, என்னுடைய முக்கியமான தொழில்நுட்ப கலைஞர்களிடம், இந்த ஐடியாவை கூறினேன்.

அவர்கள், அதனை கேட்டு சிரித்துவிட்டு, அங்கிருந்து கிளம்பிவிட்டார்கள். ஆனால், அன்றில் இருந்து 3 வருடங்கள் கழித்து, அவெஞ்சர்ஸ் திரைப்படம் வந்தது” என்று கூறினார்.

மேலும், “ஏதாவது புதிய ஐடியா தோன்றினால், அதனை திரைப்படமாக எடுத்துவிடுங்கள்.

அல்லது அந்த ஐடியாவை வேறு யாராவது திரைப்படமாக மாற்றிவிடுவார்கள். இது நல்ல ஐடியா தான் என்று யாராவது என்னை ஊக்கப்படுத்தியிருந்தால், நான் நிச்சயம் அவ்வாறு ஒரு கதையை எழுதியிருப்பேன்” என்று கூறினார்.

RELATED ARTICLES

Recent News