சென்னையில் நடைபெற்ற சனாதனத்தை ஒழிப்பு மாநாடு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, சனாதனத்தை டெங்கு, கரோனாவுடன் ஒப்பிட்டுப் பேசினார். உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு நாடு முழுவதும் இருந்து எதிர்ப்பு கிளம்பி வருகின்றன.
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் எனக் கூறிய உதயநிதி ஸ்டாலினின் தலையை வெட்டிக்கொண்டுவருபவர்களுக்கு ரூ.10 கோடி சன்மானம் அளிக்கப்படும் என உத்தரப் பிரதேச சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா தெரிவித்தார்.
இதற்கு பதிலடி தரும் விதமாக உதயநிதியின் தலைக்கு விலை அறிவித்த சாமியாரின் தலையை சீவினால் நான் ரூ.100 கோடி தருகிறேன். தலையை வெட்டு, நாக்கை வெட்டு என்று சொன்னால் அவர் சாமியார் அல்ல, கசாப்பு கடைக்காரர் என்றார்.