கண்ணை மறைத்த லெஸ்பியன் காதல்.. பறந்து சென்ற இரண்டு பெண்கள்.. தவிக்கும் குடும்பம்..

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள அரச மரத்து காட்டூர் பகுதியை சேர்ந்த ரம்யா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) என்ற இளம்பெண், தனது கணவன் மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

அப்போது, அதே பகுதியில் தனது கணவருடன் தேவி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) என்ற பெண் வசித்து வந்தார். இந்நிலையில், தேவிக்கும், ரம்யாக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இவ்வாறு இருவரும் நெருக்கமாக பழகியதால், சந்தேகம் அடைந்த தேவியின் கணவர், அங்கிருந்து வீட்டை காலி செய்துக் கொண்டு, வேறொரு பகுதிக்கு குடிபெயர்ந்தார்.

இந்நிலையில், தனது காதலியை விட்டு பிரிந்து இருக்க முடியாமல் தவித்த தேவி, கடிதம் எழுதி வைத்துவிட்டு, வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதேபோல், ரம்யாவும், தனது 3 குழந்தைகள் மற்றும் கணவரை தனியாக தவிக்கவிட்டு, தேவியுடன் சென்றுவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இரண்டு பெண்களின் கணவர்களும், காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பெண்கள் இரண்டு பேரையும் தேடி வருகின்றனர்.

லெஸ்பியன் பெண்கள் இரண்டு பேர், தங்களது காதலுக்காக, குடும்பத்தை தவிக்கவிட்டு சென்றுள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News