மனைவி திட்டியதால் கணவன் தூக்கிட்டு தற்கொலை!

சென்னை கோடம்பாக்கம் பாரதீஸ்வரர் காலனி பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 58) இவர் அதே பகுதியில் வாடகை வீட்டில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் பிளம்பிங் வேலை செய்து கொண்டு பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே மது அருந்தி வந்துள்ளார். இது தொடர்பாக மனைவி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கின்றிர்கள் என திட்டிருக்கிறார்.

இந்த நிலையில் விரக்தி அடைந்த சங்கர் மொட்டை மாடியில் உள்ள இரும்பு கேட்டில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அடிப்படையில் வடபழனி போலீசார் உடலை கைப்பற்றி கேகே நகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர்.

மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News