தனுஷ் தனது 50-வது படத்தை மும்மரமாக இயக்கி வருகிறார். வடசென்னையை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு, ராயன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், காளிதாஸ் ராயன் படத்தை குறித்து சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது, தனுஷ் சார் ரசிகர்களுக்கு தரமண சம்பவம் ஒன்று காத்திருக்கிறது. அந்த அளவிற்கு ராயன் திரைப்படம் சூப்பராக தயாராகி வருகிறது. படம் வேற லெவலில் உள்ளது என்று மிகுந்த உற்சாகத்தோடு தெரிவித்துள்ளார்.