டாக்டர் அம்பேத்கரின் 66-வது நினைவு நாள் இன்று கடை பிடிக்கப்பட்டு வருகிறது. அம்பேத்கர் காவி சட்டை அணிந்து, விபூதி பூசியவாறு இந்து மக்கள் கட்சியினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். கும்பகோணம் நகர்பகுதி முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட விசிக தலைவர் திருமாவளவன் 10 லட்சம் பேருடன் இந்து மதத்திலிருந்து வெளியேறிய அம்பேத்கரை இழிவுபடுத்தும் விதமாக சுவரொட்டி ஒட்டப்பட்டதாக குறிப்பிட்டார். மேலும் காவி உடைபோட்டு அவரை அவமதித்துள்ளவர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
வன்மையாகக் கண்டிக்கிறோம். சிவன், விஷ்ணு, பிரம்மா முதலிய கடவுள்களை வணங்கமாட்டேன் என உறுதிமொழியேற்ற புரட்சியாளர் அம்பேத்கருக்கு பட்டை-குங்குமமிட்டு காவி உடைபோட்டு அவரை அவமதித்துள்ள மதவாதப் பித்தர்களைக் கைதுசெய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு #விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். pic.twitter.com/ww2Ob2ppNu
— Thol. Thirumavalavan (@thirumaofficial) December 6, 2022
இந்நிலையில் இந்த போஸ்டரை ஒட்டிய இந்து முன்னணி நிர்வாகி குருமூர்த்தி கும்பகோணம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.