இமாச்சலபிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் இன்று
வெளிவந்துள்ளன.
இமாச்சலபிரதேசத்தில் பெரும்பான்மைக்கு 35 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். தற்போது காங்கிரஸ் 36 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜக ஆட்சியை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
காலை 10 மணி நிலவரம்
பாஜக 32 இடங்களிலும், காங்கிரஸ் 32 இடங்களிலும் முன்னிலையில் இருந்தது. சுயேட்சைகள் வேட்பாளர்கள் 4 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தனர்.
காலை 11 மணி நிலவரம்
காங்கிரஸ் 34 இடங்களில் முன்னிலையில் இருந்தது. பாஜக 30 இடங்களில் முன்னிலையில் இருந்தது. சுயேட்சைகள் வேட்பாளர்கள் 4 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தனர்.
தற்போதைய நிலவரம்
இமாச்சலபிரதேசத்தில் 36 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. பாஜக 28 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சுயேட்சைகள் 3 இடங்களில் முன்னிலை.