தீபாவளி பண்டிகை மற்றும் வார விடுமுறை என 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் அதிக அளவிலான பொதுமக்கள் கடந்த புதன்கிழமை மாலை முதல் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு அதிக அளவில் இருசக்கர வாகனங்களிலும் கார்களிலும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளிலும் சென்றனர்.
இந்நிலையில் விடுமுறை கழித்து அதிக அளவில் பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களிலும் கார்களிலும் சென்னை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர்.
இதன் காரணமாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்க சாவடி முதல் மகேந்திரா சிட்டி வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு நள்ளிரவில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின் நேற்று (நவ.3) இரவில் இருந்து அதிகாலை வரை போக்குவரத்து நெரிசல் காணப்பட்டன.
மேலும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறையினர் வாகனங்களை மாற்று பாதையில் அனுப்பி வைத்தனர்.
இரவு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் தற்பொழுது இன்று காலை நிலவரம் படி மதுராந்தகம் மற்றும் செங்கல்பட்டு பரனுர் சுங்கச்சாவடி, மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, வண்டலூர் பெருங்களத்தூர், ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டன.