திருச்சி மாவட்டத்தில், நேற்று இரவு முதல் அதிகாலை வரை கனமழை பெய்து வருகிறது. பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் தேங்கி நிற்பதாலும், சேறும் சகதியுமாக இருப்பதாலும், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் வீடு அமைந்துள்ள RMS காலனி பகுதியிலும், வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு, சேறும், சகதியும் ஆக்கிரமித்துள்ளது. குடியிருப்பு பகுதிக்கு மக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தும், நடவடிக்கை எதுவும் எடுக்காமல், அதிகாரிகள் மெத்தனமாக செயல்பட்டு வருவதாக, குற்றஞ்சாட்டப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர் குடியிருக்கும் வீட்டின் அருகிலேயே உள்ள சாலையை சீர் செய்ய மாநகராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தி வருவதால், அப்பகுதி மக்கள் கவலை அடைந்துள்ளனர்.