வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப அலை வீசி வருவதால் இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தலைநகர் டெல்லியில் வரலாற்றில் முதல்முறையாக 126.14 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. நாட்டிலேயே உச்சபட்ச வெப்பஅலை டெல்லியில் வீசி வருவதாக வானிலை மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று ராஜஸ்தான், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரப் பிரதேசம், பிஹார், ஜார்கண்ட், ஒடிசா, கிழக்கு மத்தியப் பிரதேசம் மற்றும் விதர்பாவின் பல பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையாக 45-48 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவானது.