நடிகை நயந்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவருக்கும் கடந்த ஜூன்-9 தேதி திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து விக்னேஷ் சிவன் தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்ததாக, தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். பின்னர் விதிகளை பின்பற்றாமால் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதாக பெரும் சர்ச்சை எழுந்தது.
இந்த நிலையில் வாடகைத்தாய் விவகாரத்தில் விதிமீறல்கள் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் நேற்று அறிக்கை வெளியிட்டார். மேலும் இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த இவர், தேவையில்லத வதந்திகளை உண்டாக்கி நயன் தம்பதிகளை மன உளச்சலுக்கு ஆளாக்க வேண்டாம் எனக் கூறினார். இந்த விவகாரத்தில் முறையான ஆவணங்களை பின்பற்றாததால்,மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.