தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு பூஜை எப்போது? வெளியான தகவல்

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வரும் 27ம் தேதி  விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் தான் கட்சி கொடியின் அர்த்தத்தை விஜய் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கட்சியின் கொள்கைகளும் இந்த மாநாட்டில் தான் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் விஜய் கட்சியின் தொண்டர்கள் இந்த மாநாட்டை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் நாளை மறுநாள் காலை 8 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு பூஜை நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். பூமி பூஜைக்கு பின் மாநாட்டு திடலில் பந்தல் அமைப்பது உள்ளிட்ட பணிகள் தொடங்கும் என அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News