சென்னை வண்டலுார் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு, சமீபத்தில், உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் உயிரியல் பூங்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட 10 அனுமன் குரங்குகளில் இரண்டு குரங்குகள் நேற்று முன்தினம் காலை உணவு வைக்கும் போது கூண்டில் இருந்து தப்பித்து காட்டுப்பகுதிக்கு சென்றன.
அப்போது, ஜான் என்ற நிரந்த ஊழியரும், சுகுணா (45) என்ற தற்காலி பெண் ஊழியரும் பணியில் இருந்துள்ளனர். இரண்டு நாட்கள் ஆகியும் குரங்குகளை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், மன உளைச்சலில் இருந்த சுகுணா நேற்று காலை இருந்து உணவு அருந்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
திடீரென மயங்கி விழுந்த சுகுணாவை அங்கிருந்தவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சுகுணா ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.
இச்சம்பவம், பூங்கா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூங்கா அதிகாரிகள் நெருக்கடி செய்ததாலேயே மன உளைச்சல் ஏற்பட்டு இறந்ததாக பூங்கா வட்டாரத்தில் கூறப்படுகிறது.