சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக முன்னால் தேசிய செயலாளர் எச் ராஜா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘அமைச்சர் பொன்முடி தண்டிக்கப்பட்டிருக்கிறார். திமுகவிற்கு முதல் விக்கெட் சரிந்துள்ளது. நேற்றிலிருந்து திமுகவிற்கு சனிப்பெயர்ச்சி துவங்கிவிட்டது.
பொன்முடிக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தால் ஜாமீன் கிடைத்திருக்காது. அவர் நேரடியாக சிறை சென்று இருப்பார். ஸ்டாலின் தலைமையிலான அரசு ஒட்டுமொத்தமாக ஊழல் அரசு. அது தமிழகத்திற்கு பிடித்துள்ள பீடை. இதனை அகற்றினால் தான் தமிழக மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும்.
திமுக அமைச்சர்கள், எம்பிக்களின் ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்தால், தமிழகத்தின் 8 லட்சம் கோடி கடனை அடைத்து விடலாம். அகம்பாவ பிடித்த திமுக அரசாங்கம் விரைவில் அழியும் என்றும் எச் ராஜா தெரிவித்தார்.