அண்மையில் திருப்பதி கோயில் லட்டு பிரசாதத்தில் கடந்த ஆட்சியின் போது கலப்பட நெய் சேர்க்கப்பட்டதாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். அதற்கான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டார். இது தேசிய அளவில் அதிர்வலைகளை எழுப்பியது.
இந்நிலையில், இந்த விவகாரம் அடங்குவதற்குள் திருப்பதி லட்டில் புகையிலை குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டம் கொல்லகூடேம் கிராமத்தை சேர்ந்த பத்மா என்பவர் கடந்த 19 தேதி திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்ட பின் லட்டு பிரசாதம் வாங்கி சென்றிருக்கிறார். அவர் வாங்கி சென்ற லட்டு ஒன்றில் குட்கா பாக்கெட் இருந்ததாக அவருடைய குடும்பத்தினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு கூறுகின்றனர்.
திருப்பதி மலையில் பீடி, சிகரெட், குக்கா ஆகியவை உள்ளிட்ட பொருட்களுக்கு முழு அளவில் தடை அமலில் உள்ள நிலையில் லட்டில் குட்கா வந்தது எப்படி என்ற கேள்வி ஏற்பட்டுள்ளது.