குஜராத் தொங்கு பாலம் விபத்து..! விசாரணை இன்று தொடக்கம்..!

குஜராத் மாநிலம் மொர்பி பகுதியின் ஆற்றின் நடுவே இருந்த பழமையான பாலம் அண்மையில் சீரமைக்கப்பட்டது. இது கடந்த அக்டோபர் மாதம் விபத்துக்குள்ளாகி சுமார் 141 உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் விபத்தில் பலியான குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாயும், காயமடந்தவர்களுக்கு தலா 50000 ரூபாய் வழங்கப்படும் என குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்தார்.

இதையடுத்து சுமார் 141 பேரை பலி வாங்கிய தொங்குபால விபத்து குறித்து குஜராத் உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்தது. இது குறித்து குஜராத் தலைமை செயலாளார், உள்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர் மற்றும் மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்டோர் அறிக்கை தாக்கல் செய்யுமாறு நவம்பர் 7-ஆம் தேதி உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

RELATED ARTICLES

Recent News