கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து கூட்டப்புளிக்கு சென்ற அரசு பேருந்து அழகப்பபுரம் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று பெண்களை ஏற்றாமல் சென்றது.
இதனை கவனித்த அப்பகுதி இளைஞர்கள் இருவர் தனது காரில் பேருந்தை முந்தி சென்று வழிமறித்து அந்த பேருந்து ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அரசு மகளிர்காக இலவச பேருந்து இயக்குகிறது. ஆனால் பேருந்து நிறுத்தத்தில் இரண்டு பெண்கள் நின்றும் பேருந்தை நிறுத்தாமல் செல்கிறீர்கள். உங்கள் வீட்டு பெண்கள் இப்படி ரோட்டில் நின்றால் நீங்கள் நிறுத்தாமல் செல்வீர்களா என ஓட்டுனரிடம் கேட்டு அவரை எச்சரித்து அனுப்பினர். இதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.