திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் இருந்து இன்று (ஜூன் 10) மதியம் தேனிக்கு அரசு பேருந்து கிளம்பியது. பேருந்தை டிரைவர் பழனிச்சாமி ஓட்டினார்.
பேருந்து நிலையத்தை விட்டு அரசு பேருந்து வெளியே வந்த பொழுது எதிர்பாராத விதமாக பிரேக் பிடிக்கவில்லை இதனால் பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் பேருந்து நிலையம் எதிரே திருவள்ளுவர் சாலையில் உள்ள ஸ்வீட் ஸ்டால் மற்றும் எலக்ட்ரானிக் கடை மீது பேருந்து வேகமாக மோதியது. இதில் ஸ்வீட் ஸ்டாலில் வேலை பார்த்த பெண் பிரியா காயம் அடைந்தார்.
மேலும் ஸ்வீட் ஸ்டாலின் ஸ்வீட் வாங்கிக் கொண்டிருந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் இந்த விபத்தில் டிரைவர் பழனிச்சாமிக்கு காயம் ஏற்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் எலக்ட்ரானிக் கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனமும் பலத்த சேதம் அடைந்தது இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு பேருந்து இதுபோல் விபத்துக்குள்ளாவது 4 வது முறையாகும்.