கடந்த சில வாரங்களாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வரும் சூழலில், இன்று அதிரடியாக அதிகரித்து இருப்பது நகைப் பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 80 அதிகரித்து ஒரு சவரன் ரூ.53,600-க்கும், கிராமுக்கு ரூ. 10 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 6,700-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 640 அதிகரித்து ஒரு சவரன் ரூ.54,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 80 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ. 6,780-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 7,397-க்கும், ஒரு சவரன் ரூ. 59,176-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.