குறைந்து வந்த தங்கம் விலை…திடீரென உயர்வு..!!

கடந்த செவ்வாய்க்கிழமை 2024-2025 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது தங்கம், வெள்ளிக்கான இறக்குமதி வரியை குறைத்தது. இதனால் அன்றைய தினமே தங்கம், வெள்ளியின் விலை குறைந்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நேற்று வரை 4 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 3,160 குறைந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து நகைக் கடைகளில் தங்கம் வாங்க கூட்டம் அலைமோதினர்.

இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 400 உயர்ந்து ஒரு சவரன் ரூ 51,720 க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 50 உயர்ந்து ஒரு கிராம் ரூ 6,465 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News