வெங்கட் பிரபு – விஜய் கூட்டணியில் முதல் முறையாக உருவாகி கடந்த 5ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் GOAT. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும், வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் GOAT படத்தின் வசூல் நாளுக்கு நாள் சாதனை படைத்து வருகிறது.
படம் வெளியாகி 12 நாட்கள் ஆனா நிலையில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 178 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. உலகளவில் ரூ. 390 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 400 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
GOAT படத்திற்கு முன் வெளிவந்த லியோ உலகளவில் ரூ. 598 கோடி வரை வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.