பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்று முதல்வர் மரியாதை செலுத்தினார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி இரவு பெரம்பூர் வேணுகோபால் சாமி கோவில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன்பு மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
கொலையாளிகள் தப்பிச்செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து செம்பியம் போலீசார் 10 தனிப்படைகளை அமைத்து 8 பேரை கைது செய்தனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் விரைவாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்தநிலையில், செனைன அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராய் இல்லத்துக்கு (ஜூலை 9) இன்று காலை நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின், அவரது உருவப் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதைதொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்குடி மற்றும் உறவினர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.